நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!

By SG Balan  |  First Published Jun 27, 2023, 6:50 PM IST

பைகுந்தபூர் வனப்பகுதியில் பறக்கும்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது மம்தாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.


மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சிலிகுரி அருகே செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டபோது முதல் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பைகுந்தபூர் வனப்பகுதியில் பறக்கும்போது கனமழை பொழிந்ததால் ஹெலிகாப்டர் பயங்கரமாக நடுங்கியது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த முதல்வர் மம்தா பானர்ஜியின் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பைகுந்தபூர் காட்டில் தரையிறங்க வாயப்பில்லை என்பதால் அருகில் உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

Tap to resize

Latest Videos

பாஜக மிஷன் 2024.! முஸ்லீம் ஓட்டுக்களை தட்டி தூக்கிய மோடி.. அப்படி என்ன பேசினார் பிரதமர் மோடி?

ஜல்பைகுரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து பாக்டோக்ரா விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். பின் பாக்டோக்ராவில் இருந்து கொல்கத்தா திரும்புவதற்காக இருந்தார். அவசர தரையிறக்கம் காரணமாக, பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு சாலை வழியாகப் பயணம் செய்த மம்தா, விமானத்தில் கொல்கத்தா திரும்பினார். எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்றார்.

"அதிக கனமழை பெய்து கொண்டிருந்தது, பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் மோசமான வானிலையில் ஹெலிகாப்டர் பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. அதனால், பைலட் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்," என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் லோனில்... ஜட்டி வரை உருவிட்டான்... பாதிக்கப்பட்ட இளைஞரின் புலம்பல் பாடல்!

மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் முதல்வரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ள மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா திரும்பியுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதே போன்ற விபத்தில் மம்தா சிக்கி இருந்தார். நந்திகிராமில் பிரச்சாரத்தின்போது காயமடைந்த மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செய்தார்.

கோடையில் வண்ணமயமாக ஜொலிக்கும் செவ்வாய் கிரகம்! நாசா விண்கலம் எடுத்த கண்கவர் புகைப்படங்கள்!

click me!