மம்தா பானர்ஜியை கொல்ல சதி? - நாடாளுமன்றத்தில் கடும் அமளி

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 05:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
மம்தா பானர்ஜியை கொல்ல சதி? - நாடாளுமன்றத்தில் கடும் அமளி

சுருக்கம்

மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற விமானம் போதுமான எரிபொருள் இல்லாமல், தாமதமாக கொல்கத்தாவில்  தரையிறங்கிய, விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மம்தாவை கொல்ல சதி நடக்கிறது என்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எரிபொருள் இல்லை

முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன் தினம்  பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து  இன்டிகோ நிறுவன விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு வந்தார். அப்போது வழக்கமான நேரத்துக்கு வர வேண்டிய விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கியது. இதுபோல், ஏர் இந்தியா, மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்களும் இதே காரணத்தால் தாமதமாக தரையிறங்கின.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கேட்டபோது, எரிபொருள் பிரச்சினையால் 30 நிமிடங்கள் தாமதாக விமானம் தரையிறக்கப்பட்டது என்று விமானக் கட்டுப்பாட்டு மையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அமளி

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்டகட்சிகள் நேற்று எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கொல்ல சதி

மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபத்யாயே பேசுகையில்,“ முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற விமானம் எரிபொருள் இல்லாமல் இருந்துள்ளது. அவரை கொல்ல சதி நடந்துள்ளதா என்பது குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.

பாதுகாப்பு

காங்கரிஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே பேசுகையில், “ மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்தும், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நாடுமுழுவதும் சென்று வருகிறார். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரின் விமானம் முதலில் தரையிறங்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்து இருக்க வேண்டும். வி.வி.ஐ.பி.கள் செல்லும் விமானத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று பேசினார்.

விசாரணை

இதற்கு பதில் அளித்து விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் கஜபதி ராஜூ பேசுகையில், “ மம்தாபானர்ஜி சென்ற விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கவில்லை. அது 13 நிமிடங்கள் மட்டுமே தாமதமாக தரையிறங்கியது. இது போல் மேலும் 2 விமானங்கள் தாமதமாக தரையிறங்கி இருக்கின்றன. இது குறித்து சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்த நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

அறிக்கை தாக்கல்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் பேசுகையில், “ முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரின் நலனையும் இந்த அவை விரும்புகிறது. சிவில்விமானப்போக்குவரத்து இயக்குநர் விசாரணை அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.

மாநிலங்கள் அவை

மாநிலங்கள் அவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டிரெக் ஓபிரையன் பேசுகையில், “ பாட்னாவில் இருந்து கொல்கத்தாாவுக்கு இன்டிகோ விமானம் ஒரு மணிநேரம் பயணிக்கும். கொல்கத்தாவில்இருந்து 200கி.மீ. தொலைவுக்கு முன்பே, விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு, பைலட்டை தொடர்பு கொண்டு 8-வது வரிசையில் தரையிறக்குங்கள் என்று கூறியுள்ளார்.

அப்போதே பைலட் விமானத்தில் போதுமான எரிபொருள் இல்லை என்பதை கூறி, முன்கூட்டியே தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். விமானி எச்சரிக்கை செய்தும், 15 நிமிடங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி மட்டுமல்லாலு 100க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரும் ஆபத்தில் சிக்கியிருக்கும். இன்று ஒரு எதிர்க்கட்சித் தலைவர். இவர்தான் ரூபாய்நோட்டு விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து வந்தார்'' என்றார்.

நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து விமானப் போக்குவரத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பேசுகையில்,“ விமானத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் உயிரும் எங்களுக்கு முக்கியம். ஒவ்வொரு விமானமும் பாதுகாப்பாக தரையிறங்கவே அனைத்து முயற்சிகளும் எடுக்கிறோம். இதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். சிவில் விமான போக்குவரத்து விதிகளை மீறி இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

வலியுறுத்தல்

மேலும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், சமாஜ் வாதிக் கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஐக்கிய ஜனதாதளத்தின் சரத் யாதவ், ராஷ்ட்ரியஜனதாதளம் கட்சி எம்.பி. பிரேம் சந்த் குப்தா, காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!