"வங்கிகளிடம் இருந்து கடனே வாங்கல…" - காமெடி பண்ணும் விஜய் மல்லையா…

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
"வங்கிகளிடம் இருந்து கடனே வாங்கல…" - காமெடி பண்ணும் விஜய் மல்லையா…

சுருக்கம்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் 9 

ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிவந்தார்.

 இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்

 தாக்கல் செய்திருந்தன. அதில், 

விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக 

அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று 

கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது, 2016  மார்ச் மாதம் 2ம்  தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். 

இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு 

ஜாமீனில் வெளிவர

முடியாதபிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் மல்லையா இதுவரை

நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய 

அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கிங் பிஷ்சர்  ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தன் சொந்த கணக்கிற்கு மல்லையா திருப்பி விட்டதாக புகார் உள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து தனது டவிட்டர் பக்கத்தில் கிங் பிஷ்சர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதி முறைகேடாக

திருப்பி விட்டதாக கூறப்படுவது  குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் வங்கிகளில் கடனே

வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை தான் குற்றவாளி என கூறமுடியாது என்றும் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

1.5 கோடி பேரை காப்பாற்றிய என்ஜினியர்! சென்னை ஐஐடி பேராசிரியருக்கு மத்திய அரசின் உயரிய விருது!
ஒரு பைசா கூட குறையாது.. நான் கேரண்டி! 800 கோடி ரூபாய் நஷ்டத்திலும் நம்பிக்கையை காப்பாற்றிய ரத்தன் டாடா!