பி.எப். கணக்கில் இருந்து வரி இல்லாமல் 4 மடங்கு பணம் எடுக்கலாம் - பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
பி.எப். கணக்கில் இருந்து வரி இல்லாமல்  4 மடங்கு பணம் எடுக்கலாம் - பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது

சுருக்கம்

தனியார் நிறுவன தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் பி.எப். கணக்கில் இருந்து  வரி இல்லாமல் பணம் எடுக்கும் அளவை 4 மடங்கு அதிகரிக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. 

அந்த பரிந்துரையை மத்திய நிதிஅமைச்சகம் ஏற்றுக்கொண்டதால், வரி இல்லாமல் பி.எப். கணக்கில் இருந்து பணம் எடுக்கும் அளவு அதிகரிப்பது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர்  பி.எப். கணக்கு வைத்திருந்து,  5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் தன்னுடைய பி.எப். சேமிப்பில் இருந்து ரூ. 50 ஆயிரம்  எடுத்தால்,  சேவை வரி உள்ளிட்ட ஏறக்குறைய 35 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பான் கார்டு சமர்பித்தால், 10 சதவீதம் வரி கழிக்கப்பட்டு 24 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இந்தநிலையை மாற்றி, பி.எப். கணக்கு தொடங்கி, ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றாவிட்டாலும் கூட ரூ. 2 லட்சம் வரை பி.எப். கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம் அதற்கு, வரி கிடையாது என்ற சலுகையை பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

இது தொடர்பாக சமீபத்தில், மத்திய தொழிலாளர்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், தொழிலாளர்கள் தங்கள் பி.எப். கணக்கில் இருந்து, வரி இல்லாமல் பணம் எடுக்கும் அளவை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். அவர்களிடம் பான்கார்டு விவரங்கள் கேட்கக் கூடாது எனக் தெரிவித்துள்ளது. 

மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தின் கோரிக்கையை நிதிஅமைச்சகம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக மத்தியஅரசு வட்டாரங்கள் கூறுகின்றன. ஆதலால், வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 

இந்த அறிவிப்பு வெளியாகும்  பட்சத்தில், பி.எப். கணக்கு வைத்து இருக்கும் ஒருவர் முழுமையாக 5 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே, தனது கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக வரி இல்லாமல் பணம் எடுக்க முடியும்.  இதன் மூலம், தொழிலாளர்கள் தங்களின் குழந்தைகளின் படிப்புச்செலவு, மருத்துவச்செலவு, வீடு கட்டுதல், முதலீடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். 

PREV
click me!

Recommended Stories

மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!