ஏ.டி.எம். லிருந்து ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது​

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஏ.டி.எம். லிருந்து ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது​

சுருக்கம்

ஏ.டி.எம்.களில் இருந்து ஒரே நாளில் ரூ. 24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பை  மத்தியஅரசு விரைவில்  வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேசமயம், வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிபந்தனை பிப்ரவரி மாத இறுதிவரை மாற்றப்படாது என்றும் மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. 

நாள் ஒன்றுக்கு ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு கார்டு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மட்டுமே என்றும், வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் வரை வங்கியில் எடுக்கலாம் என்ற முதலில் கட்டுப்பாடு இருந்தது. 

பின், 50 நாட்கள் முடிவுக்கு பின், அதாவது  டிசம்பர் 30-ந்தேதிக்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, ஒரு நாளில்ரூ.  4500 ஆகவும், அதன்பின் நாள் ஒன்றுக்கு ஒரு ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது. 

இந்நிலையில், பணப்புழக்கத்தை  படிப்படியாக அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. வங்கிகளுக்கு தேவையான பணத்தையும், ஏ.டி.எம்.களுக்கு தேவையான பணத்தையும்  போதுமான அளவில் அளித்து வருகிறது. 

ஆதலால், இப்போது, நாள்ஒன்றுக்கு ஒரு ஏ.டி.எம். கார்டு மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.  வாரத்துக்கு இதுபோல் எடுத்தால், 3 முறை, ரூ. 24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்கலாம். 

இந்த நிலையை மாற்றி,  ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு ஏ.டி.எம்.கார்டு மூலம் ஒரே நாளில் ரூ. 24 ஆயிரம் வரை எடுப்பதற்கான அறிவிப்பை மிகவிரைவில் அரசு வெளியிடும் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ. 24 ஆயிரம் என்ற கட்டுப்பாடு இப்போதுள்ள நிலையில் நீக்கப்படாது என்றே தெரிகிறது. 

PREV
click me!

Recommended Stories

1.5 கோடி பேரை காப்பாற்றிய என்ஜினியர்! சென்னை ஐஐடி பேராசிரியருக்கு மத்திய அரசின் உயரிய விருது!
ஒரு பைசா கூட குறையாது.. நான் கேரண்டி! 800 கோடி ரூபாய் நஷ்டத்திலும் நம்பிக்கையை காப்பாற்றிய ரத்தன் டாடா!