"மோசடி மல்லையா" விவகாரம்… 8 பேரை கைது செய்தது சி.பி.ஐ.!

Asianet News Tamil  
Published : Jan 24, 2017, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
"மோசடி மல்லையா" விவகாரம்… 8 பேரை கைது செய்தது சி.பி.ஐ.!

சுருக்கம்

தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் மோசடி வழக்கில், IDBI வங்கியின் முன்னாள் தலைவர், கிங் ஃபிஷர் நிறுவன அதிகாரிகள் உட்பட 8 பேரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடமிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு 

தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து, தேடப்படும்குற்றவாளியாக அவர் அறிவிக்‍கப்பட்டார். மேலும், ஜி.எம்.ஆர். ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பணம் செலுத்த வேண்டிய வழக்கிலும் ஹைதராபாத் நீதிமன்றம் அவருக்‍கு பிடிவாரண்ட்பிறப்பித்து இருந்தது. அத்துடன் செக் மோசடி வழக்கிலும் ஹைதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு எதிராக 5 பிடிவாரண்ட்டுகளை பிறப்பித்திருக்கிறது. 

இந்நிலையில், மல்லையா கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ஐ.டி.பி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர், அந்த வங்கியின் முன்னாள் அதிகாரிகள், 

கிங் ஃபிஷர் நிறுவன அதிகாரிகள் 4 பேர் உட்பட 8 பேரைசி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.

முன்னதாக, பெங்களூருவில் உள்ள மல்லையாவுக்‍கு சொந்தமான UB குரூப் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது 

குறிப்பிடத்தக்‍கது

PREV
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
கருவறையிலும் கைவரிசை! சபரிமலை தங்கக்கொள்ளையில் அடுத்தடுத்த அதிர்ச்சி.. சென்னையில் முக்கியக் குற்றவாளிகள்!