
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர்.
வசூலில் சாதனை படத்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் ஸ்டைலிஷ் ஆக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரமும், ஸ்டைலும் வழக்கம் போல ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கதாபாத்திரமான முத்துவேல் பாண்டியனை மலையாள ஸ்பீடு கார்ட்டூனிஸ்ட் ஜித்தேஷ் வரைந்து அசத்தியுள்ளார். ஆன் தி ஸ்பாட்டில் அவர் வரைந்த முத்துவேல் பாண்டியனின் கார்டூன் ஓவியம் வைரலாகி வருகிறது.
காவாலா டான்ஸ் ஆடிய இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்!