
கேதர்நாத் யாத்திரை வழியில் பல கடைகள் இருந்துள்ளன. இந்தக் கடைகளும் புதைந்துள்ளன. இதனால், பலர் இடிந்த கடைகளின் இடிபாடுகளில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ருத்ரபிரயாக் பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலச்சரிவில் 10 முதல் 12 பேர் புதையுண்டு இருக்கலாம் அல்லது அடித்து செல்லப்படலாம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார், இந்த சோக சம்பவத்தை உறுதிப்படுத்தி உள்ளார். "கௌரி குண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கடைகள் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 12 பேரை காணவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
பீர் பாட்டிலால் தாக்கி ரூ.4.5 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல்.. தக்காளி விவசாயிக்கு நேர்ந்த சோகம்..
சம்பவ இடத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து மேலும் ராஜவர் கூறுகையில், ''காணாமல் போனவர்கள் அனைவரும் கடைகளை நடத்தி வந்தவர்களாக இருக்கக் கூடும். யாத்திரை வந்தவர்கள் அல்ல'' என்று உறுதிபடுத்தியுள்ளார். உத்தரகண்ட் பகுதிகளில் கன மழை பெய்வதால் கேதர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளது.