கோவாவில் இருந்து ராகுல் காந்தி கொண்டு வந்த நாய்க்குட்டி!

Published : Aug 04, 2023, 08:33 AM IST
கோவாவில் இருந்து ராகுல் காந்தி கொண்டு வந்த நாய்க்குட்டி!

சுருக்கம்

கோவா பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பியுள்ள ராகுல் காந்தி தன்னுடன் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டியை கொண்டு வந்துள்ளார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன் தினம் இரவு தனிப்பட்ட பயணமாக கோவா சென்றார். தனது கோவா பயணத்தை முடித்துக் கொண்டு, மறுநாள் வியாழக்கிழமை காலையில் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லி வந்து சேர்ந்துள்ளார்.

டெல்லி வந்த ராகுல் காந்தி, கோவாவில் இருந்து தன்னுடன் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டியையும் கொண்டு வந்துள்ளார். வடக்கு கோவாவில் உள்ள மபுசா நகரில், ஷிவானி பித்ரே என்பவர் தனது கணவர் ஸ்டான்லி பிரகன்காவுடன் சேர்ந்து நாய் பண்ணையை நடத்தி வருகிறார். அங்கிருந்துதான் ராகுல் காந்தி ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டி வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.

ராகுல் காந்தி இரண்டு நாய்க்குட்டிகளை தேர்வு செய்ததாகாவும், அதில் ஒரு நாய்க்குட்டியை அவர் எடுத்துச் சென்றுள்ளார். மற்றொரு நாய்க்குட்டி கூடிய விரைவில் அவருக்கு அனுப்பப்படும் என ஷிவானி பித்ரே தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்ற கடுகு: அனுமதியை திரும்பப் பெற பிரதமருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்!

மேலும், நாய்க்குட்டிகளை பற்றி விசாரிக்க ராகுல் காந்தி தனது பிரதிநிதியை அனுப்பியதாகவும், அதனை வாங்குவதற்கு முன்னர் அதனை தானே நேரில் பார்க்க விரும்பி தனது பண்ணைக்கு அவர் வந்ததாகவும் ஷிவானி பித்ரே தெரிவித்துள்ளார்.

கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில், மபுசா நகரில் உள்ள ஷிவானி பித்ரேவின் நாய் பண்ணைக்கு வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ராகுல் காந்தி வந்ததாகவும், அவர் பணிவுடன் நடந்து கொண்டதாகவும், தனது பண்ணையில் இருந்த சிறிது நேரத்தில் பெரும்பாலும் அவர் நாய்க்குட்டிகளுடன் நேரத்தை செலவிட்டதாகவும் ஷிவானி பித்ரே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவா எம்எல்ஏக்கள் மற்றும் கோவா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமித் பட்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை புதன்கிழமை இரவு ஹோட்டலில் சந்தித்து ராகுல் காந்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க