நாட்டில் போதை மருந்து கடத்துவோர், விற்பனை செய்வோர், பதுக்கியோர் ஆகியோரைக் கண்டறிந்து கைதுசெய்யும் ஆப்ரேஷன் கருடா நாடுமுழுவதும் தொடங்கியுள்ளது.
நாட்டில் போதை மருந்து கடத்துவோர், விற்பனை செய்வோர், பதுக்கியோர் ஆகியோரைக் கண்டறிந்து கைதுசெய்யும் ஆப்ரேஷன் கருடா நாடுமுழுவதும் தொடங்கியுள்ளது.
சிபிஐ, தேசிய போதைமருந்து தடுப்பு பிரிவிரினர் ஆகியோர் மாநில போலீஸாருடன் இணைந்து ஆப்ரேஷன் கருடாவை நடத்தி வருகிறார்கள். இதுவரை இந்த ஆப்ரேஷனில் 175பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆப்ரேஷன் கருடா இந்த வாரத் தொடக்கத்தில் தொடங்கியது. இதில் சிபிஐ, என்சிபி, மாநில போலீஸார் ஆகியோருடன், இன்டர்போலும் சேர்ந்துள்ளனர். இதுவரை 127 வழக்குகள் ஆப்ரேஷன் கருடாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, மணிப்பூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து சிபிஐ, என்சிபி அதிகாரிகள் மாநில போலீஸாருடன் இணைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில், பல இடங்களில் ஏராளமான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.