கெஜ்ரிவாலுக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல்.. - டெல்லியில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Jan 26, 2017, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
கெஜ்ரிவாலுக்கு  இ-மெயிலில் கொலை மிரட்டல்.. - டெல்லியில் பரபரப்பு

சுருக்கம்

மாநில முதலமைச்சருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த 2 நாட்களாக இ-மெயில் வந்து கொண்டே இருந்தது. அதை ஒரே நபர் அனுப்பியுள்ளார். அதை திறந்து படித்தபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது.

அதில், அரவிந்த் கேஜ்ரிவாலை விரைவில் கொலை செய்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்துத, கொலை மிரட்டல் வந்த இ-மெயில் குறித்து, அரவிந்த் கேஜ்ரிவால், போலீசில் புகார் செய்தா.

மேலும், இந்த கொலை மிரட்டல் தொடர்புன புகார் குறித்து விசாரிக்க, டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மாவுக்கு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, ஒரே நபரிடம் இருந்து 2 முறை இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!