
அந்த புறநகர் ரயிலின் 5 பெட்டிகளில் தீயில் எரிந்து நாசமானது என்று முதல்கட்ட தகவல்கள் வந்துள்ள நிலையில், தீ பரவுவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், காயங்கள் மற்றும் இறப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் சிவராஜ் மனஸ்புரே கூறுகையில், பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் விரையில் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்.