மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளில் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவான வாக்குகள் விவரம் வெளியாகி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மொத்தம் 48 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன.
உத்தரப்பிரதேசம் மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்: இந்தியா கூட்டணி முன்னிலை!
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவான வாக்குகள் விவரம் வெளியாகி வருகின்றன. அதன்படி, அம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.
மகாராஷ்டிர மாநில மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் முன்னிலை விவரம்
பாஜக - 10
சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - 7
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) - 1
சிவசேனா (உத்தவ் தாக்கரே) - 10
காங்கிரஸ் - 10
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) - 08
சுயேச்சை - 01