மக்களவை தேர்தல் 2024 : வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை..

By Ramya s  |  First Published Jun 4, 2024, 10:14 AM IST

மக்களவை தேர்தல் வாக்கு எண்னிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு, ரே பரேலி தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.


மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 543 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிய ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டது.

இதில் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 2-ம் தேதியுடன் முடிவடைவதால் அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

வாரணாசியில் மோடிக்குப் பின்னடைவு! உ.பி.யில் பாஜகவை அடிச்சுத் தூக்கும் இந்தியா கூட்டணி!

இந்த நிலையில் மக்களவை தேர்தல், ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

ஆரம்பக்கட்ட நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 284 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 221 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

உத்தரப்பிரதேசம் மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்: முன்னிலை நிலவரம்?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு, ரே பரேலி தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ரேபரேலியில் 20000 வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் முன்னிலையில் இருக்கிறார். வாரணாசி தொகுதியில்முதல் 3 சுற்றுகளில் பிரதமர் மோடி சுமார் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்தார்.. எனினும் 4வது சுற்று முதல் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். 

உத்திரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். 

click me!