பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக 19 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதாதளம் 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் தொகுதியின் சிட்டிங் எம்.பி. ஆவார். இந்த முறையும் அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டது.
undefined
வாரணாசி மக்களவைத் தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடி பின்னடைவு!
இதனிடையே, ஆபாச வீடியோக்கள் தொடர்பான சர்ச்சையில் பிரஜ்வல் ரேவண்ணா சிக்கினார். அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நாட்டை விட்டு வெளியேறிய பிரஜ்வல் ரேவண்ணா அண்மையில் மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.
ஹாசன் தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 2000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் எம் படேலை விட முன்னிலை வகித்து வருகிறார்.