மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கப்போது யார்? வெளியானது கருத்து கணிப்பு! ஜார்க்கண்ட்டில் நிலை என்ன?

By vinoth kumar  |  First Published Nov 20, 2024, 7:55 PM IST

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனவும், ஜார்க்கண்டிலும் பாஜக வெற்றி பெறும் எனவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், ஆட்சியை பிடிக்கப்போது யார் என்ற எதிர்பார்ப்பு  அனைவரின் மத்தியிலும் எழுந்தது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த சூழலில் மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகள் வெளியாகி தேசிய அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆட்சிக்கு தேவையான பெருபான்மையான இடங்களான 145 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்து கணிப்பு முடிவுகள்

* ஏபிபி மெட்ரிஸ் கருத்துகணிப்பில் பாஜக கூட்டணி 150 முதல் 170 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களிலும் மற்றக் கட்சிகள் 8 முதல் 10 தொகுதிகள் வெல்லும். 

* பி-மார்க் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 137 முதல் 157 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களிலும், மற்றவை 2 முதல் 8 இடங்களிலும் வெல்லும் 

* டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி  150 முதல் 170 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களிலும், மற்றவை 8 முதல் 10 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 

* பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பில்  பாஜக கூட்டணி 175 முதல் 195 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 112 இடங்களையும், மற்றவை 7 முதல் 12 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

அதேபோல் 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என முடிவுகள் தெரிவிக்கின்றன. 

click me!