மகாராஷ்டிராவில் மரண பயத்தை காட்டும் கொரோனா.. பாதிப்பு புதிய உச்சத்தால் அலறும் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Jul 22, 2020, 11:25 AM IST
Highlights

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 8,369 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3.27 லட்சமாக  உயர்ந்துள்ளது. 
 

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 8,369 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3.27 லட்சமாக  உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் அரசு வேகத்தில் தாக்கி வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், நேற்று ஒரே நாளில் 8,369 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை  3,27,031ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,32,236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 7,188 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,82,217ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12,276 ஆக உயர்ந்துள்ளது.

click me!