முதல்வருக்கு பிடிவாரண்ட்... ஆபரேஷன் கருடா திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு!

By vinoth kumarFirst Published Sep 14, 2018, 7:10 AM IST
Highlights

அணையை பார்வையிட சென்ற விவகாரத்தில் வரும் 21-ம் தேதிக்குள் ஆந்திர முதல்வரை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அணையை பார்வையிட சென்ற விவகாரத்தில் வரும் 21-ம் தேதிக்குள் ஆந்திர முதல்வரை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு தேசிய கட்சியின் நெருங்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு நடிகர் சிவாஜி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். ஆபரேஷன் கருடா திட்டத்தை தேசிய கட்சி செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

 

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள பாப்லி ஆற்றின் மீது மகாராஷ்ரா அரசு அணைகட்ட முடிவு செய்தது. அப்போது 144 தடை உத்தரவு இருக்கும் போது அதை எதிர்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து 16 பேர் தர்ணா மற்றும் பாதயாத்திரை மேற்கொண்டனர். அதற்காக ஆந்திர முதல்வர் மற்றும் 16 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

அதன்பின் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மகாராஷ்டிரா அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக மகாராஷ்டாராவில் உள்ள தர்மாபாத் நீதிமன்றம் வியாழக்கிழமை மாலை ஆந்திர முதல்வர் உட்பட 16 பேர் மீது பிணையில்லா வாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும், 21-ம் தேதி சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட 16 பேரும் தர்மாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!