உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை நியமித்தார் குடியரசுத் தலைவர் …. அக்டோபர் 3 ஆம் தேதி பதவியேற்பு !!

Published : Sep 13, 2018, 08:25 PM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை நியமித்தார் குடியரசுத் தலைவர் ….  அக்டோபர் 3 ஆம் தேதி பதவியேற்பு !!

சுருக்கம்

சுப்ரீம் கோர்ட்டின்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் , புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது. 

அதன்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 3- தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!