மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: விரலில் 'மை' க்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள்.. பொங்கியெழுந்த எதிர்க்கட்சிகள்!

Published : Jan 15, 2026, 01:21 PM IST
BMC election 2026

சுருக்கம்

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் அழியாத மை பயன்படுத்துவதற்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. காலை 9.30 மணியளவில் 7% வாக்குகள் மட்டுமே பதிவாகின. மும்பையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர், திரை பிரபலங்கல் அக்சய்குமார்,சுனில் ஷெட்டி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்

இந்த தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கொண்ட ஆளுங்கட்சியின் மகாயுதி கூட்டணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கொண்ட எதிர்க்கட்சியின் மகா விகாஸ் அகாடி கூட்டணியும் போட்டியாளர்களாக உள்ளன.

மும்பை மாநாகராட்சியை கைப்பற்றப்போவது யார்?

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநாகராட்சியில் மட்டும் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாட்டுகே வணிகத் தலைநகரமாக விளங்கி வரும் மும்பை மாநாகராட்சியை யார் கைப்பற்றுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை (ஜனவரி 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார்கள்? என்பது தெரிந்து விடும்.

விரலில் 'மை' க்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள்

இதற்கிடையே மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் அழியாத மை பயன்படுத்துவதற்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 'இப்படி முறைகேடுகள் செய்து குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம்' என ஆளுங்கட்சி கூட்டணி முயற்சிப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இதே நடைமுறை தான்

மகாராஷ்டிராவில் அழியாத மை பயன்படுத்துவதற்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது இது முதன்முறை அல்ல. பல ஆண்டுகளாக அங்கு உள்ளாட்சி தேர்தலில் 'மை'க்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மையை விட மார்க்கர் பேனா பயன்படுத்துவது விரைவாகவும், எளிதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. விரலில் மை வைத்தால் எளிதில் அழியாது. ஆனால் மார்க்கர் வைத்தால் அழிந்து விடும். இதன்மூலம் முறைகேடுகளை செய்ய முடியும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ED அலுவலகத்தில் ரெய்டு நடத்திய போலீஸார்..! பாஜக அதிர்ச்சி..!
ஜெட் வேகத்தில் பலமாகும் பாஜக..! இடிந்து விழும் கம்யூனிஸ்ட் கோட்டை.. பீதியில் காங்கிரஸ்..!