
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கில் நடப்பது சீனாவின் வரலாற்று ரீதியான இந்தியாவிற்கு செய்யும் துரோகம். இது இந்தியாவிற்கு ஆபத்தான புண்ணாக மாறியுள்ளது. இந்த பிரச்சினையில் இந்தியாவுடன் சூழ்ச்சி செய்ய சீனாவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சொந்தமில்லாத அல்லது எந்த உரிமையும் இல்லாத நிலத்தை பாகிஸ்தான் ஒப்படைத்தது. ஆனால், ஒரு சட்டவிரோத ஒப்பந்தத்தின் பெயரில், திபெத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சீனாவிடம் அதை ஒப்படைத்தது. ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் வேதனையான கதை 1963-ல் தொடங்கியது. இப்போது கடுமையான சிகிச்சை தேவைப்படும் ஒரு காயமாக மாறியுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு
1963 ஆம் ஆண்டு சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின் கீழ் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுகு வழங்கப்பட்டதால் அது தனக்கு சொந்தமானது என்று சீனா கூறுகிறது. ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு குறித்த சீனாவின் தற்போதைய அதிகாரப்பூர்வ நிலைப்பாடு "ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு சொந்தமானது. எங்கள் பிரதேசத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் எந்தத் தவறும் இல்லை" என்பதாகும். இதற்கு சீனா 1963 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான எல்லை ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டுகிறது. ஆனாலும், விரிவாக்கவாத சீனாவின் இந்த நோக்கம் முற்றிலும் சட்டவிரோதமானது. ஏனென்றால், வரலாற்று, சட்ட உண்மை என்னவென்றால், ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுக்குச் சொந்தமில்லாதபோது, அதை சீனாவுக்கு எப்படி சட்டவிரோதமாக ‘பரிசாக’ கொடுக்க முடியும்?
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் புவியியல் இருப்பிடம்
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹன்சா-கில்கிட் பகுதியின் ஒரு பகுதி. கரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் வடக்கே சீனாவின் (திபெத்) ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி. அதன் கிழக்கே சியாச்சின் பனிப்பாறை உள்ளது. எனவே, இந்தியா அதை சட்டப்பூர்வமாக உரிமை கோருகிறது. ஆனாலும், பாகிஸ்தான் முதலில் 1948-ல் அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, பின்னர் 1963-ல் சீனாவிடம் ஒப்படைத்தது.
1963 ஒப்பந்தம் என்றால் என்ன?
1963 ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க பாகிஸ்தான் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அது ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனாவிடம் ஒப்படைத்தது. இரு நாடுகளும் இதை 1963 ஆம் ஆண்டு சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று குறிப்பிடுகின்றன. அதாவது, ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு ஏற்கனவே பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தபோது, அதை சீனாவிடம் ஒப்படைக்கும் உரிமையை அது எப்படி பெற்றது? சட்டப்பூர்வமாக, அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலமாகவும், இப்போது லடாக் யூனியன் பிரதேசமாகவும் இருந்தது. இதனால்தான் இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி இந்த விஷயத்தில், "சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு அறிக்கை சட்டவிரோதமானது. அங்கு எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஏற்கவில்லை. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதை அங்கீகரிக்கவில்லை. இரு நாடுகளின் சட்டவிரோத செயலாகவும் கருதுகிறோம்" என்று கூறியுள்ளார்.
முரணான சீனாவின் நோக்கம்
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டவிரோத ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டபோது, அப்படி செய்ய தங்களுக்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்பதை அறிந்திருந்தது. ஏனென்றால் இது 1963 ஆம் ஆண்டு சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின் பிரிவு 6-ன் விதிகளிலிருந்து தெளிவாகிறது. "பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான காஷ்மீர் தகராறு தீர்க்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட இறையாண்மை கொண்ட நாடு இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 2ல் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையில் சீன மக்கள் குடியரசு அரசுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் என்றும், இந்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான முறையான எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நோக்கத்துடன் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள்" என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
சீனா விரிவாக்க நோக்கங்கள்
இதன் பொருள், சீனாவும் பாகிஸ்தானும் 1963 எல்லை ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பாகிஸ்தானுக்கு இந்தப் பகுதியில் எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்பதை இரு நாட்டினரும் அறிந்திருந்தனர். இருப்பினும், இதன் அடிப்படையில், 1970 களில் அவர்கள் கூட்டாக கரகோரம் நெடுஞ்சாலையைத் தொடங்கினர். பாகிஸ்தானுடனான அதன் ஒப்பந்தம் அதன் உரிமைகோரலை பலவீனப்படுத்துகிறது என்பதை அறிந்திருந்தாலும், சீனா இப்போது இந்த பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கியுள்ளது. அதன் சட்டப்பூர்வ உரிமைகோரலை வலியுறுத்துகிறது. இதன் காரணமாக, ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு தற்போது சீனாவின் சட்டவிரோத கட்டுப்பாட்டில் இருந்தாலும், அது முழு ஜம்மு-காஷ்மீர் உட்பட பாகிஸ்தான் ஆக்ம்கிரமிப்பை போலவே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது இந்தியாவின் தெளிவான பார்வை.