ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து! தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறல்.. 25 பேர் உடல் கருகி பலி..!

By vinoth kumar  |  First Published Jul 1, 2023, 7:45 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மாலில் இருந்து 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு புனே நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து புல்தானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென  தீப்பிடித்தது.


மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மாலில் இருந்து 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு புனே நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து புல்தானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென  தீப்பிடித்தது. இதனால், அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பேருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியதால் பயணிகள் வெளியே வர முடியாததால் பேருந்தில் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுப்பெண்.. மறுநாளே பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் கணவர்.. நடந்தது என்ன?

 

இந்த தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிங்க;-  என் பொண்டாட்டி கூடவே உல்லாசமா இருப்பியா! கள்ளக்காதலி கண்முன்னே கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை! நடந்தது என்ன?

இந்த தீ விபத்து சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!