அதிகரித்து வரும் பணக்காரக் குடும்பங்கள்... தமிழ்நாட்டுக்கு 2வது இடம்! ஆய்வில் தகவல்

By SG Balan  |  First Published Jul 10, 2023, 7:49 AM IST

இந்த ஆய்வில் ஆண்டு வருமானம் ரூ.30 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பம் பணக்காரக் குடும்பம் என்றும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் குடும்பம் நடுத்தரக் குடும்பம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


புதிதாக வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று, பத்து மாநிலங்கள் நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான பணக்கார குடும்பங்களைக் கொண்டுள்ளன என்று கூறுகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 26.2 லட்சம் பணக்காரக் குடும்பங்கள் உள்ளன. 90 ஆயிரம் பணக்காரக் குடும்பங்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

'தி ரைஸ் ஆஃப் தி மிடில் கிளாஸ்: எ ஃபோர்ஸ் டு ரெக்கன் வித்' என்ற தலைப்பில் இந்திய நுகர்வோர் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுக் குழுவான பீப்பிள் ரிசர்ச் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 4 சதவீத குடும்பங்கள் பணக்காரக் குடும்பங்களாக இருப்பதையும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

Tap to resize

Latest Videos

ம.பி.யில் இளைஞரை காரில் கடத்தி சரமாரியாகத் தாக்கி உள்ளங்காலை நக்க வைத்த கொடுமை!

அதாவது 2021ஆம் நிதி ஆண்டு வரை இந்தியாவில் 1.67 கோடி பணக்கார குடும்பங்கள் இருந்துள்ளன. இது 2016ஆம் நிதியாண்டில் இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆய்வில் ஆண்டு வருமானம் ரூ.30 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பம் பணக்காரக் குடும்பம் என்றும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் குடும்பம் நடுத்தரக் குடும்பம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் குடும்பங்கள் ரூ.1.25 முதல் ₹5 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். ஆதரவற்றோர் ஆண்டுக்கு ₹1.25 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர் என ஆய்வில் குறிப்பிடப்படுகிறது.

நாட்டில் 5 லட்சத்துக்குக் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பீப்பிள் ரிசர்ச் ஆய்வு தெரிவிக்கிறது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பேரணியை தோற்கடித்த இந்திய ஆதரவாளர்கள்

click me!