தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, 53 எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் திருப்பத்தை உண்டாக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும் சிவசேனா இரண்டாக உடைந்தது.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து புதிய அரசு அமைத்தது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியின் 39 பேர், உத்தவ் தாக்கரே அணியின் 14 பேர் என சிவசேனா கட்சியின் மொத்தமுள்ள 53 எம்.எல்.ஏ.களுக்கு தகுதி நீக்க நோட்டீசை சட்டப்பேரவை சபாநாயகர் அனுப்பியுள்ளார்.
BJP Vs DMK : முதல்வருக்கு 14 கேள்விகள்.. அண்ணாமலை போட்ட லிஸ்ட் - ஆடிப்போன திமுக தலைமை..!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுத்துள்ள சபாநாயகர், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் 7 நாட்களுக்குள் விளக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 53 சிவசேனா எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சமர்ப்பித்த பட்டியலில் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இடம் பெறவில்லை. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர், ஜூலை 8 சனிக்கிழமையன்று, சிவசேனாவின் இரு பிரிவு எம்எல்ஏக்களுக்கும் ஒருவரையொருவர் தகுதி நீக்கம் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !