இன்ஸ்டாவில் 12 லட்சம் ஃபாலோயர்ஸ்.. ம.பி தேர்தலில் 2292 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த பிரபல நடிகை..

Published : Dec 06, 2023, 12:16 PM ISTUpdated : Dec 06, 2023, 01:54 PM IST
இன்ஸ்டாவில் 12 லட்சம் ஃபாலோயர்ஸ்.. ம.பி தேர்தலில் 2292 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த பிரபல நடிகை..

சுருக்கம்

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பிரபல நடிகை சஹத் பாண்டே வெறும் 2292 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

230 தொகுதிகள் கொண்ட மத்திய சட்டசபைக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இந்த தேர்தலில் பாஜக 163 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்த தேர்தலில் தொலைக்காட்சி நடிகை சஹத் பாண்டேவும் போட்டியிட்டார். மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அவர் வெறும் 2292 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

தாமோ மாவட்டத்தை சேர்ந்த சஹத் பாண்டே கடந்த ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில்  சேர்ந்தார். இதை தொடர்ந்து அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எனினும் அவர் இந்த தேர்தலில் வெறும் 2292 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 12 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இன்ஸ்டாவில் லட்சக்கணக்கான பேர் அவரை பின் தொடர்ந்தாலும் தேர்தல் களத்தில் அவருக்கு மிகப்பெரிய தோல்வி கிடைத்துள்ளதால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் அரசியல் களம் எல்லோருக்கும் சமமானது இல்லை என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சஹத் பாண்டே போட்டியிட்ட தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜெயந்த் மாள்வியா 1,12.278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

மிசோரம் முதல்வராக லால்துஹோமா நாளை மறுநாள் பதவியேற்பு!

யார் இந்த சஹத் பாண்டே?

பவித்ரா பந்தன் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் தனது 17வது வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினார் சஹத் பாண்டே. தெனாலி ராமா, ராதா கிருஷ்ணா, நாகின் 2, சாவ்தான் இந்தியா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!