
மத்தியப் பிரதேசத்தில் ஷியோபூர் நகரில், 10வயது சிறுவனை முதலை விழுங்கிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் முதலையைப் பிடித்து டார்ச்சர் செய்துள்ளனர்.
ஷியோபூர் மாவட்டம், ரகுநாத் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ரிஹென்டா கிராமத்தில், சம்பல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கடந்த திங்கள்கிழமை 10வயதான அத்தர் சிங் கேவத் என்ற குளித்தான். அப்போது, 8அடி நீளம் கொண்ட முதல் ஆற்றில் சிறுவனை தாக்கியது.
சிறுவனும் முதலையிடம் இருந்து தப்பிக்கப் போராடினார். இந்தத் தகவல் அறிந்த மக்கள் விரைந்துவந்து ஆற்றில் குதித்து முதலையை வலைவீசிப் பிடித்தனர். ஆனால், சிறுவனை அத்தர் சிங்கைக் காணவில்லை. இதனால் முதலை சிறுவனை உயிருடன் விழுங்கியதாக மக்கள் நம்பினர்.
இது குறித்து வனத்துறையினருக்கும், ரகுநாத் போலீஸ் நிலையத்துக்கும் மக்கள் தகவல் அளித்தனர். முதலையின் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்ததால், சிறுவனை விழுங்கி இருக்கும் என்று நம்பிய மக்கள் முதலை வாயை அசைக்காத வகையில் வாயில் கட்டையை வைத்து கட்டினர்.
மேலும் முதலையின் கை, கால்களையும் கட்டி அசையாமல் வைத்தனர். வனத்துறையினர், போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம், முதலை சிறுவனை விழுங்கிவிட்டது என்றும், மென்று திண்ணாமல்இருக்க வாயில் கட்டையை வைத்திருப்தாகவம் கிராம மக்கள்தெரிவித்தனர்.
ஆனால், வனத்துறையினரும், போலீஸாரும் சிறுவனை முதலை விழுங்க வாய்ப்பில்லை, முதலை வயிற்றுக்குள்ளும் சிறுவன் இருக்கமாட்டார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, தீதடுப்பு வீரர்கள், மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு ஆற்றில் இறங்கி சிறுவனைத் தேடினர். திங்கள்கிழமை மாலை வரை தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, முதலையை வனத்துறையினர் மீட்டு, வேறு பகுதியில் கொண்டு விட்டனர். ஆனால், சிறுவனை காணவில்லை என்பதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
இந்நிலையில் நேற்றுகாலை அந்த கிராமத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் சிறுவன் உடல் ஒதுங்கியது. அதன்பின் போலீஸார் வரவழைக்கப்பட்டு சிறுவன் உடலை அங்கேயே மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்து உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.