கார் மீது பேருந்து மோதி விபத்து.. 11 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.. உடனே நிவாரணம் அறிவித்த பிரதமர்.!

Published : Nov 04, 2022, 10:39 AM ISTUpdated : Nov 04, 2022, 10:44 AM IST
கார் மீது பேருந்து மோதி விபத்து.. 11 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.. உடனே நிவாரணம் அறிவித்த பிரதமர்.!

சுருக்கம்

மத்திய பிரதேசத்தில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசத்தில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 12 பேர் சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, கார் போபால் மாவட்டம் பெதுல் என்ற இடத்தில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் ரத்த வெள்ளதத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க;- என்னையா கடிக்கிற.? நாகப்பாம்பை அசால்டா வளைத்து பிடித்து கடித்து கொன்ற சிறுவன்..

இதில், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 11 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 11 பேரும் தொழிலாளர்கள் என்பதும், சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 11 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  அந்தரங்க படங்கள் வெளியாக கூடாது.. அதனால் தான் கொன்றேன்! கேரளா இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்

PREV
click me!

Recommended Stories

கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!