எல்லைப் பாதுகாப்புக்காக 10 வான்வழி இலக்கு கருவிகள், 120 தற்கொலை ட்ரோன்களையும் வாங்கும் இந்திய ராணுவம்

By Pothy RajFirst Published Nov 4, 2022, 10:36 AM IST
Highlights

எல்லைப் பாதுகாப்புக்காக அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில், வான்வழி இலக்குகளை தாக்கி அழிக்கும் 10 கருவிகளையும், 120 தற்கொலை ட்ரோன்களையும் வாங்க இந்திய  ராணுவம் திட்டமிட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புக்காக அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில், வான்வழி இலக்குகளை தாக்கி அழிக்கும் 10 கருவிகளையும், 120 தற்கொலை ட்ரோன்களையும் வாங்க இந்திய  ராணுவம் திட்டமிட்டுள்ளது.

லாய்டர் மியுனிஷன் என்பது தற்கொலை ட்ரோன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ட்ரோன்கள் மூலம் எதிரி இலக்குகளை குறிவைத்து, அனுப்பிவைத்து தாக்குதல்  நடத்த முடியும். எதிரி இலக்குகலை அழித்துவிட்டு ட்ரோனும் வெடித்து சிதறிவிடும். 

இந்திய இராணுவத்திற்கான புதிய போர் சீருடை… வடிவமைப்புக்கு காப்புரிமை பெற்று அசத்தல்!!

சீனா, பாகிஸ்தான் நாடுகளுடனான எல்லைப்பபகுதிகளில் பாதுகாப்பாகவும், உயர்ந்த மலைப்பகுதிகளில் பாதுகாப்புக்காகவும், ஊடுருவல் செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இந்த நவீன ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன

இது தொடர்பாக இந்திய ராணுவம், கடந்த 1ம் தேதி ஆயுதங்கள் விற்பனையாளர்களுக்கு கடிதம் எழுதி, இந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள்  குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. 

வான்வழி இலக்குகளை தாக்கி அழிக்கும் கருவிகள், தற்கொலை ட்ரோன்கள் ஆகியவை 300 மீட்டர் உயரத்தில் பறக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும், அனைத்து காலநிலையிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ராணுவம் கேட்டுக்குள்ளது.

சுவாசிக்க முடியாத சூழல்! புகை சூழ் டெல்லி-என்சிஆர் மண்டலம்: என்ன காரணம்?

அனைத்து காலநிலையிலும் பயன்படுத்தக்கூடிய லாஞ்சர்கள், குறைந்தபட்சம் 100 கி.மீ தொலைவுக்கும், குறைந்தபட்சம் 2மீட்டர் துல்லியம் காண்பிக்கும் வகையிலும் லாஞ்சர்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து தாக்குதல் நடத்த தாங்கும் வகையில் ஆயுதங்கள் இருக்க வேண்டும், எந்த திசையிலிருந்தும், எந்தத் திசைக்கும் மாற்றும் வகையில் லாஞ்சர்கள் இருக்க வேண்டும். இரவு, பகல் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாகவும், அதற்கு ஏற்றவாறு, இலக்குகளை கண்காணிக்கும்வசதியும் இருக்க வேண்டும்.

மோர்பி பாலம் விபத்து: எப்ஐஆர்-இல் ஒரேவா நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை? ப.சிதம்பரம் கேள்வி

தற்கொலை ட்ரோன்கள், இலக்கை தாக்கி அழிக்கும் போது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், இலக்கை நோக்கி சரியாகச் சென்று, துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.  

அனைத்து பகுதிகளிலும், இடங்களிலும், மலைப்பகுதிகளிலும், காலநிலையிலும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக மைனஸ் 20 டிகிரி குளிரிலும், அதிகபட்சமாக 40 முதல் 55 டிகிரி வெப்பமான பகுதியிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். 
இவ்வாறு ராணுவம் கோரியுள்ளது
 

click me!