பள்ளிகளுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீடு; குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா முன்னிலை; கோட்டைவிட்டதா தமிழ்நாடு?

By Dhanalakshmi GFirst Published Nov 3, 2022, 4:04 PM IST
Highlights

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு, கல்வி துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள பள்ளிக் கல்வி முறையின் ஆய்வு முடிவாகும்.

உலகிலேயே இந்தியாவின் கல்வி முறையும், திறனும் மிகப் பெரியது. 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக, பொருளாதார பின்னணியில் இருந்து ஏறக்குறைய 26.5 கோடி மாணவர்களைக் கொண்ட இந்தியக் கல்வி அமைப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருக்கும் பள்ளிக் கல்வி செயல்திறன் மற்றும் சாதனைகள் தரம் குறித்து பற்றி அறிவதற்கு  தர வரிசைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது, 2020-21 ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகியுள்ளது. 

தர வரிசைக் குறியீடு நிர்ணயம் என்பது 1000 புள்ளிகளை உள்ளடக்கியது. இது இரண்டு  வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இது மேலும் 5 களங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, அதாவது கற்றல் முடிவுகள்,  அணுகுதல், உள்கட்டமைப்பு, வசதிகள்,  ஆளுமை செயல்முறை ஆகியவையாகும். 

வங்கியில் வேலை வேண்டுமா..?? எப்படி விண்ணப்பிப்பது..? கல்வித்தகுதி, வயது குறித்து முழு விவரம் இதோ..

மொத்தம் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கேரளா, பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை 2020-21 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலையை (மதிப்பெண் 901-950) எட்டியுள்ளன. இந்த மாநிலங்களில் இதற்கு முந்தைய 2017-18ஆம் ஆண்டுகளில் பட்டியலில் இடம் பெறவில்லை. இதுவரை இல்லாத அளவிற்கு குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிய சாதனைகளை அடைந்துள்ளன. 

புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூனியன் பிரதேசமான லடாக் 2020-21 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அதாவது, 2019-20 உடன் ஒப்பிடும்போது 2020-21 ஆம் ஆண்டில் 299 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் 851 - 900 என்ற குறியீடுகளுடன் தமிழ்நாடு மூன்றாம் நிலையில் இருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டை விட தமிழகம் குறியீடுகளில் முன்னேறியுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் குறித்த அனைத்து விவரங்களையும் அறிவதற்கு, 2020-21 தர வரிசைக் குறியீடு இணைப்பை பெறுவதற்கு  https://pgi.udiseplus.gov.in/#/home என்ற இணைப்பை பார்க்கலாம்.

Gujarat Election Date: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு

click me!