மாட்டிறைச்சியை கண்டுபிடிக்க பிரத்யேக கருவி - போலீசாருக்கு வழங்க முடிவு!!

 
Published : Jul 09, 2017, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
மாட்டிறைச்சியை கண்டுபிடிக்க பிரத்யேக கருவி - போலீசாருக்கு வழங்க முடிவு!!

சுருக்கம்

machine for identify beef meat

இறைச்சி விற்பனையாளர்கள், மாட்டிறைச்சி வைத்து இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கும் சிறிய கருவியை மஹாராஷ்டிரா போலீசாருக்கு ஆளும் பா.ஜனதா அரசு வழங்க உள்ளது.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.  மாட்டிறைச்சி சாப்பிட தடைவிதிப்பது, மாடு விற்பனையை தடை செய்வது, மாடுகளை கொண்டு செல்பவர்களை அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பசு வதைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, மாட்டிறைச்சியை சட்ட விரோதமாக விற்பனைசெய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் பசுவதைக்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் ஆளும் முதல்வர் தேவேந்திரபட்நாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசு, கடத்தலில் பிடிபடும் இறைச்சி, மாட்டிறைச்சியா எனக் கண்டுபிடிக்க போலீசாருக்கு பிரத்யேகக் கருவியை வழங்க உள்ளது.

இதற்காக மாநில தடவியல்துறை ஆய்வகம் இதற்காக பிரத்யேக கருவிகளை உருவாக்கியுள்ளது. இந்த கருவி மூலம் மாமிசத்தை சோதனையிட்டால், அது மாட்டிறைச்சியா அல்லது எந்த விலங்கின் இறைச்சி என்று தெரிந்துவிடும்.

இது குறித்து மாநில தடவியல்துறையின் இயக்குநர் கே. ஓய்.குல்கர்னி கூறுகையில், “ மாநிலத்தில் மாட்டிறைச்சி விவகாரம் தீராத பிரச்சினையாக இருக்கிறது. மாட்டிறைச்சியால் பல்வேறு சிக்கல்களை, பிரச்சினைகள் தொடர்ந்து உண்டாகின்றன. இதையடுத்து, இறைச்சி விற்பனையாளர்கள், வாகனத்தில் இறைச்சி கொண்டு செல்பவர்கள் ஆகியோரை போலீசார் சோதனை செய்யும் போது அது மாட்டிறைச்சி தானா என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை.

இதைத் தீர்க்கும் வகையில், இறைச்சியின் மீது நாங்கள் உருவாக்கிய கருவியை வைத்தால், அது மாட்டிறைச்சியா அல்லது எந்த விலங்கின் இறைச்சி என 30 நிமிடங்களுக்குள் தெரிந்துவிடும். இந்த கையடக்க கருவியை வைத்து எந்த இறைச்சியின் மாதிரியையும் எடுத்துவந்து 30 நிமிடங்களுக்குள் பரிசோதிக்க முடியும்.

ஐதராபாத்தை சேர்ந்த அறிவியலாளர் டாக்டர் பானுஷாலி என்பவர் மூலம் இந்த கருவியை கடந்த சிலமாதங்களாக தீவிரமாக உழைத்து உருவாக்கி இருக்கிறோம். 45 வேன்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு ரோந்துக்கு அனுப்பப்படும். இந்த கருவி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், மாநிலத்தில் மாட்டிறைச்சி சட்டவிரோதமாக கடத்தப்படுவது தடுக்கப்படும்.

இந்த கருவி மாட்டிறைச்சி மீது வைத்த 30நிமிடங்களில் மாட்டிறைச்சி மஞ்சள் நிறமாக மாறிவிடும். அதன்பின் அந்த இறைச்சியை அடுத்த பரிசோதனைக்கு அனுப்பலாம். ஆனால், மற்ற விலங்கின் இறைச்சி நிறம் மாறாது.  இந்த கருவியின் விலை ரூ. 8 ஆயிரமாகும்” எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!