சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி நியமனம்!

Published : Apr 06, 2025, 04:48 PM ISTUpdated : Apr 07, 2025, 09:15 AM IST
சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி நியமனம்!

சுருக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பினராயி விஜயன் இதனை அறிவித்தார். இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக கேரள சிபிஎம் தலைவர் எம்.ஏ. பேபி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில், கேரளா முதலவர் பினராயி விஜயன் இதனை அறிவித்தார்.

இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு சிபிஎம் பொதுச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். மறைந்த சிபிஎம் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியை அடுத்து எம்.ஏ. பேபி இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பேபி சிபிஎம் மூத்த தலைவரான தலைவராக நன்கு அறியப்பட்டது.

மதுரையில் இன்று காலை நடைபெற்ற பொலிட்பீரோ கூட்டத்தின்போது அவரை புதிய பொதுச்செயலாளராக நியமிப்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. மத்திய குழு இந்த முடிவை முறையாக அங்கீகரித்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

எம்.ஏ. பேபியின் அரசியல் பயணம்:

கேரளாவின் கொல்லத்தில் இருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது. பல ஆண்டுகளாக மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஒரு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார். 32 வயதில் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு குந்தாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2006 முதல் 20111 வரை வி.எஸ்.அச்சுதானந்தன் அமைச்சரவையில் மாநில கல்வி அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்தபோது பள்ளிப் பாடப்புத்தகங்களில் மாணவர்களிடம் நாத்திகத்தைப் பரப்பியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். 2011ஆம் ஆண்டில் மீண்டும் குந்தாராவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் கொல்லம் தொகுதியில் களம் கண்ட பேபி, காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஆர்எஸ்பி தலைவர் என்.கே. பிரேமச்சந்திரனிடம் தோல்வியைத் தழுவினார்.

வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை:

உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்தியக் குழு உறுப்பினர்கள் பேபியை பொதுச்செயலாளராக்குவது பற்றித தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநில செயலாளர் ரவிசங்கர் மிஸ்ரா கட்சி மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தவும் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயது வரம்பு தளர்வு:

கட்சிக்குள் அதிகார மாற்றம் நிகழும் நேரத்தில் பினராயி விஜயன், யூசுப் தாரிகாமி, பி.கே. ஸ்ரீமதி ஆகியோர் மத்திய குழுவில் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வயது வரம்பு தளர்வுகளைப் பெற்றுள்ளனர். டி.பி. ராமகிருஷ்ணன், புத்தலத் தினேசன் மற்றும் கே.எஸ். சலீகா ஆகியோர் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், குழுவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முகபது ரியாஸின் பெயர் இடம்பெற்றவில்லை.

மதுரையில் கட்சியின் மாநாடு நிறைவடைந்த நிலையில், சவால் நிறைந்த ஒரு முக்கியமான காலகட்டத்தில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு எம்.ஏ. பேபியின் வசம் வந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!