முடிவுக்கு வந்தது லாரிகள் ஸ்ட்ரைக் - 2 நாட்களில் 95 லட்சம் லாரிகள் பங்கேற்பு...

Asianet News Tamil  
Published : Oct 10, 2017, 07:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
முடிவுக்கு வந்தது லாரிகள் ஸ்ட்ரைக் - 2 நாட்களில் 95 லட்சம் லாரிகள் பங்கேற்பு...

சுருக்கம்

Lorry Strike the last 2 days has demanded the removal of customs booths across the country. 95 lakh trucks were participated.

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற கோரி கடந்த 2 நாட்கள் நடைபெற்ற லாரிகள் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ளது. இதில் 95 லட்சம் லாரிகள் பங்கேற்றன. 

லாரிகள் வாங்கும்போது, விற்கும்போது இரு முறை ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் செலுத்த வேண்டியதை தவிர்க்க வேண்டும், டீசல் விலையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும், சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

2-வது நாளாக இன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 95 லட்சம் லாரிகள் பங்கேற்றன. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் தமிழகம் முழுவதும் உள்ள 5 லட்சம் லாரிகள்  2 நாளாக ஓடவில்லை.

2 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கி உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி இழப்பீடு என சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!
மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது.. அச்சுதானந்தன் முதல் ரோகித் சர்மா வரை.. பத்ம விருதுகள் முழு லிஸ்ட்!