Lok Sabha elections 2024 தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு என்ன வித்தியாசம்?

By Manikanda Prabu  |  First Published May 31, 2024, 5:50 PM IST

இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு என்ன வித்தியாசம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முடிந்த பின்னர், மாலை 6.30 மணிக்கு மேல் வெளியாகவுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தேர்தல் காலங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. opinion polls எனப்படும் வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் exit polls எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வாக்காளர்களின் மனநிலையை அறிய உதவுகின்றன. இவை துல்லியமாக இல்லாவிட்டாலும், முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், வாக்கெடுப்பு முடிவுகளைக் கணிக்கும் இந்த இரண்டு முறைகளுக்குமே வித்தியாசம் உள்ளன.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ன வித்தியாசம்?

வாக்காளர் வாக்களிப்பதற்கு முன்பு நடத்தப்படுவது Opinion Polls எனப்படும் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் ஆகும். அதுவே, வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் நடத்தப்பட்டு வெளியிடப்படுபவை Exit Polls எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எனப்படுகின்றன.

தேர்தலுக்கு முந்தைய நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்களில் கூட Opinion Polls எனப்படும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கருத்துக்கணிப்புகள் பொதுமக்களிடம் இருந்து அவர்களது அரசியல் தேர்வுகள் பற்றிய கருத்துக்களை சேகரிக்கும் நோக்கம் கொண்டவை. யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்ற வாக்காளர்களின் திட்டங்களை அறிந்து கணிப்பாக வெளியிடப்படுபவை Opinion Polls ஆகும். இத்தகைய கருத்துக்கணிப்புகள் பொதுமக்களின் மனநிலையை உணரவும், சாத்தியமான தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே தெரிவிக்கவும் உதவுகின்றன. தேர்தலுக்கு முன்பு ஊடக நிறுவனங்கள் Opinion Polls எனப்படும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை அவ்வப்போது வெளியிடுகின்றன. 

Exit Poll Result 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது? - முழு விவரம்!

அதேபோல், வாக்கெடுப்பு நாளில் வாக்குச்சாவடியை விட்டு வெளியேறிய பிறகு, வாக்காளர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்று கேட்டு வெளியிடப்படுபவை Exit Polls எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பாகும். இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு Exit Polls எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இது தேர்தல் முடிவுகள் பற்றி உத்தேச முடிவுகளை வழங்குகின்றன.

மொத்தத்தில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள்? அவர்களின் திட்டம் என்ன? என்பதை அறிந்து வெளியிடப்படுபவை Opinion Polls எனப்படும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை நிகழ்நேரத்தில் அறிந்து உண்மையான வாக்களிப்பு முறைகளை பிரதிபலிப்பவை Exit Polls எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆகும்.

வாக்காளர்களின் விருப்பங்களை மதிப்பிடுவதற்கு, சீரற்ற மாதிரிகள் Opinion Pollsஇல் பயன்படுத்தப்படுகின்றன. அதுவே, வாக்காளர்கள் வாக்களித்த உடனேயே அவர்களிடம் இருந்து தரவுகளை Exit Polls சேகரிக்கின்றன.

எத்தனை பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது? அவர்களிடம் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன? கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்கள் யார் என்பதை பொறுத்து Opinion Polls முடிவுகள் அமைகின்றன. தேர்தலுக்கு பிந்தைய Exit Polls கருத்துக் கணிப்புகளை விட தேர்தலுக்கு முந்தைய Opinion Pollsகளில் பிழைகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

வாக்களர்களின் திட்டங்கள், விருப்பமான அரசியல் கட்சிகள் மற்றும் பலவிதமான கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை  Opinion Polls. ஆனால், வாக்காளர்களின் வேட்பாளர் தேர்வு பற்றி அறிந்து வெளியிடப்படுபவை Exit Polls. இந்தியாவில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 126A உட்பட பல சட்டங்களுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் உட்பட்டது.

இருப்பினும், Opinion Polls மற்றும் Exit Polls ஆகிய இரண்டுமே கேள்விகளுக்கு உட்பட்டவைதான். இரண்டுமே துல்லியமான முடிவுகளை வழங்கும் என்று கூற முடியாது. கருத்துக்கணிப்பின் முடிவுகளானது கேள்விகள், மாதிரிகள், எடுக்கப்பட்ட நேரம் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படலாம். எனவே, வாக்காளர்களின் இறுதி முடிவை கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாக பிரதிபலிப்பதில்லை. Opinion Pollsஐ விட Exit Polls துல்லியமாக இருப்பது போல தெரிந்தாலும் அதிலும் பிழைகள் இருக்கலாம். வாக்காளர் ஒருவர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்று அளிக்கும் பதிலை பொறுத்தே அவை  அமைகிறது. ஒருவேளை அவர்கள் உண்மையை சொல்லாவிட்டால் கருத்துக்கணிப்பு முடிவுகளும் உண்மையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!