Lok Sabha Elections 2024 : பாரதிய ஜனதா கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் எப்போதும் பாஜக மூத்த தலைவரான அத்வானிதான் போட்டியிடுவார். ஆனால், இந்த முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார்.
டெல்லியில் இருக்கும் பாஜக தலைமையகத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தற்போது அமைச்சர்களாக இருக்கும் 34 மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பட்டியலை வெளியிடும்போது, டெல்லியில் உள்ள பாஜக மத்திய அலுவலகத்தில் அர்ஜூன் பாண்டேவும் உடன் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுவார் என வினோத் தாவ்டே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 51 மக்களவைத் தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 20 இடங்களுக்கும், டெல்லியில் 5 இடங்களுக்கும், கோவா மற்றும் திரிபுராவில் தலா ஒன்று மற்றும் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 28 பெண்கள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட 47 வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டதால், பெண்கள் மற்றும் இளம் தலைவர்கள் மீது கட்சியின் முக்கியத்துவம் வெளிப்பட்டுள்ளது. இரண்டு முன்னாள் முதல்வர்களும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மேலும் மத்திய இணை அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதியிலும், சபாநாயகரான ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டா தொகுதியிலும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உ.பி-யின் அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அதே போல ஹேமா மாலினி எம்.பி உத்தர பிரதேசம் மதுரா தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த 195 தொகுதிக்கான முதற்கட்ட பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியான இந்த 195 மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் உத்தரபிரதேசத்தில் 51 இடத்திற்கும், மேற்கு வங்கத்தில் 20 இடங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் 24 இடங்களுக்கும், குஜராத்தில் 15 இடங்களுக்கும், ராஜஸ்தானில் 15 இடங்களுக்கும், கேரளாவில் 12 இடங்களுக்கும், தெலுங்கானாவில் 9 இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதே போல அசாமில் 11 இடங்களுக்கும், ஜார்கண்டில் 11 இடங்களுக்கும், சத்தீஸ்கரில் 11 இடங்களுக்கும், டெல்லியில் 5 இடங்களுக்கும், ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களுக்கும், உத்தரகாந்த் பகுதியில் 3 இடங்களுக்கும், ஆந்திர பிரதேசத்தில் 2 இடங்களுக்கும், கோவா, திரிபுரா, அந்தமான் மற்றும் டாமன் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திற்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி காட்சிகள் குறித்த முடிவுகள் இன்னும் முழுமையாக எடுக்கப்படாத நிலையில், அந்த பணிகள் முடிந்த பிறகு தான் தமிழகத்திற்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.