Spanish Woman Gang Raped : ஜார்கண்ட் மாநிலம் தும்காவுக்கு தனது கணவருடன் பைக்கில் சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டு பெண், தற்காலிக கூடாரத்தில் இரவைக் கழிக்க நினைத்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தனது கணவருடன் பைக்கில் சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தும்காவின் ஹன்ஸ்திஹா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஒரு தற்காலிக கூடாரத்தில் இரவைக் கழிப்பதற்காக அந்த தம்பதிகள் ஒரு இடத்தில் நின்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இப்பொது இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் "இந்த கூட்டு பலாத்கார சம்பவம் நேற்று மார்ச் 1ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடந்தது" என்று ஜார்முண்டி துணை பிரிவு போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் ஊடகங்களுக்கு அளித்த தகவலில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கல்லூரி வாசலில் வைத்து மாணவி குத்திக்கொலை! கொடூரனுக்கு சரியான தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!
சுற்றுலா வந்த அந்த தம்பதியினர் தும்கா வழியாக பீகாரின் பாகல்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் மற்றும் ஹன்ஸ்திஹா மார்க்கெட் அருகே இரவு நேரம் கூடாரத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் வங்கதேசத்தில் இருந்து தும்காவை அடைந்து பீகார் வழியாக நேபாளம் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் நபர்களால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஸ்பானிஷ் நாட்டு பெண் தற்போது தும்காவில் உள்ள ஃபுலோ ஜானோ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அமர்நாத் கோஷ் யார்? அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?