கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்துக்கு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு குறித்து வேட்புமனு சமர்ப்பின்போது, அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி, ராகுல் காந்திக்கு ரூ. 9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், அசையா சொத்துக்களாக ரூ.11.15 கோடி என மொத்தம் ரூ.20 கோடி சொத்து உள்ளது, தனக்கு சொந்தமாக வீடோ காரோ இல்லை என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!
அசையும் சொத்துக்களாக ரூ.55,000 ரொக்கம், வங்கியில் ரூ.26.25 லட்சம், பங்கு மற்றும் பத்திரங்களாக ரூ.4.33 கோடி, ரூ.3.81 கோடி மதிப்புள்ள மியூச்சுவல் ஃபண்டு, ரூ.15.21 லட்சம் மதிப்புள்ள தங்க பத்திரங்கள், ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள நகைகளும் ராகுல் காந்தியிடம் உள்ளது. மேலும், அசையா சொத்துக்களாக தனக்கும், தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு சொந்தமாக டெல்லியின் மெஹ்ராலியில் விவசாய நிலம் உள்ளதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அதனை பரம்பரை சொத்து என குறிப்பிட்டுள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமில் சொந்தமாக அலுவலக இடம் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதார். அதன் மதிப்பு தற்போது ரூ.9 கோடிக்கும் அதிகாக இருக்கும் என தெரிகிறது.
அத்துடன், பஜகவினர் பதிவு செய்துள்ள பல அவதூறு வழக்குகள், நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தன் மீது உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.