பிரபல அரசியல் கட்சியின் சின்னம் திடீர் முடக்கம்… தேர்தல் ஆணையம் அதிரடி

By manimegalai aFirst Published Oct 2, 2021, 7:03 PM IST
Highlights

பிரபல கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் முடக்கி இருக்கிறது.

டெல்லி: பிரபல கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் முடக்கி இருக்கிறது.

லோக் ஜனசக்தி கட்சியில் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு கட்சியில் பூசல் அதிகரித்துள்ளது. பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தரப்பில் ஒரு க்ரூப்பும், பசுபதி குமார் பாரஸ் தலைமையில் ஒரு க்ருப்பும் மோதிக் கெண்டனர்.

கட்சியில் இரு தரப்புமே மாறி, மாறி ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டே இருந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதிய சிராக் பாஸ்வான், கட்சி தலைவர் பசுபதி குமார் என்பது உண்மையில்லை என்று கூறி இருந்தார்.

பீகாரில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் இரண்டு தரப்பினருமே கட்சி சின்னத்துக்காக முட்டி மோதினர். இரண்டு தரப்பினரின் பிரச்னை முடிவுக்கு வரும் வரை கட்சியின் சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை இடைத் தேர்தலில் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

click me!