“பிரதமர் மோடி தான் முதலிடம் ! மற்ற பிரதமர்களுக்கு இடமே கிடையாது தெரியுமா !” வெளியான அதிர்ச்சி தகவல் !

By Raghupati R  |  First Published Aug 20, 2022, 9:20 PM IST

இந்திய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையான பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பங்குச்சந்தை பட்டியலின்படி, உலகத்தில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலை பார்ச்சுன் என்ற அமைப்பு எல்லா ஆண்டும் வெளியிட்டு வருகிறது. உலகளவில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி 98 வது இடத்தை பிடித்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 97.26 பில்லியன் யுஎஸ்டி, மற்றும் இதன் லாபம் 553.8 மில்லியன் யுஎஸ்டி. ரிலையன்ஸ் நிறுவனம் 51 இடங்கள் முன்னேக்கி சென்று தற்போது 104 இடத்தை பிடித்துள்ளது.

ரியலையன்ஸ் நிறுனத்தின் வருவாய் 93.98 பில்லியன் யுஎஸ்டி, மற்றும் இதன் லாபம் 8.15 பில்லியன் யுஎஸ்டி. மேலும் இந்த தரவரிசை பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கிறது. எல்.ஐ.சி நிறுவனம் இந்த பட்டியலில் இருப்பது சிறப்பென்றாலும், நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தற்போது வரிசையாக தனியார் மயமாக மாறி வருகிறது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, ஒருசில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இதில்ரயில்வே, தபால் - தந்தி, துறைமுகஅறக்கட்டளைகள், ஆயுத தொழிற்சாலைகள், அரசு உப்பு தொழிற்சாலைகள் போன்ற சில நிறுவனங்கள் துறை ரீதியாக நிர்வகிக்கப்பட்டன.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

சுதந்திரம் பெற்றதில் இருந்து, தொழில் துறை, பொருளாதார வளர்ச்சியில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தனித்துவமான பங்கை ஆற்றி வருகின்றன. வேலையின்மை, கிராமப்புற - நகர்ப்புற வேறுபாடு, பிராந்திய, வர்க்க வேறுபாடுகள், தொழில்நுட்பத்தில் பின்தங்கியது போன்ற பிரச்சினைகளை ஒழிக்கவும், பொதுத்துறையை தன்னிறைவான பொருளாதார வளர்ச்சிக்கான கருவியாக மேம்படுத்த அமைக்கப்பட்டது. இந்திய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையான பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆரம்ப காலங்களில் இந்திய பிரதமர்கள் பொதுத் துறை நிறுவனங்கள உருவாக்கி வந்துள்ளனர். அண்மைக்காலத்தில் இதற்கு தலைகீழாக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. நாட்டின் ஒரே பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் விரைவில் தனியார் வசம் போகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சுமார் 45 சதவீத பங்குகளை டாடா குழுமத்தின் டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு பிரதமர்களும் அவர்கள் உருவாக்கிய பொதுத்துறைகளையும் இதில் பார்க்கலாம். ஜவாஹர்லால் நேரு 33 பொதுத்துறை நிறுவனங்களையும், லால் பகதூர் சாஸ்திரி 5 பொதுத்துறை நிறுவனங்களையும், இந்திரா காந்தி 66 பொதுத்துறை நிறுவனங்களையும், ராஜீவ் காந்தி 16 பொதுத்துறை நிறுவனங்களையும், வி.பி  சிங் 2 பொதுத்துறை நிறுவனங்களையும் உருவாக்கி உள்ளனர்.

பி.வி நரசிம்ம ராவ் 14 பொதுத்துறை நிறுவனங்களையும், ஐ.கே.குஜ்ரால் 3 பொதுத்துறை நிறுவனங்களையும், அடல் பிகாரி வாஜ்பாய் 17 பொதுத்துறை நிறுவனங்களையும், 7 நிறுவனங்களையும் தனியார் மயமாக்கினார்.மன்மோகன் சிங் 23 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். 3 நிறுவனங்களை தனியார் மயமாக்கினார். நரேந்திர மோடி 23 நிறுவனங்களை தனியார் மயமாக்கி உள்ளார். இந்திய பிரதமர்களிலே பொதுத்துறை நிறுவனங்களை அதிகளவு தனியார் மயப்படுத்தியவர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..முதல்வரை சந்தித்தது எம்.பி பதவிக்கு தானா ? ஓ.பி ரவீந்திரநாத் சொன்ன அதிர்ச்சி தகவல் !

click me!