இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்
உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சுற்றுலாத்துறையை வளர்க்கும் பொருட்டு, சுற்றுலாக் கொள்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், இந்திய சுற்றுலாப்பிரியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசை பட்டியலில் 80ஆவஹு இடத்தில் இருக்கும் இந்தியா, உலகம் முழுவதும் 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. அதாவது, அந்த நாடுகளுக்கு செல்ல முன்பே விசா எடுக்க வேண்டியதில்லை. அந்த நாடுகளுக்கு சென்றவுடன் on-arrival எனப்படும் விசாவை எடுத்துக் கொள்ளலம்.
அதன்படி, குக் தீவுகள், பிஜி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நியு பலாவ் தீவுகள், சமோவா, துவாலு, வனுவாடு, ஈரான், ஜோர்டான், ஓமன், கத்தார், பார்படாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஜமைக்கா, மாண்ட்செராட், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் தி கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் செல்லலாம்.
அதேபோல், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆசிய நாடுகளான, பூட்டான், கம்போடியா, இந்தோனேஷியா, கஜகஸ்தான், லாவோஸ், மக்காவோ (SAR சீனா), மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கும் விசா இல்லாமல் செல்லலாம்.
ஆருத்ரா ஊழல்: சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு!
மேலும், பொலிவியா, எல் சல்வடோர், புருண்டி, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், ஜிபூட்டி, காபோன், கினியா-பிசாவ், மடகாஸ்கர், மொரிட்டானியா, மொரீஷியஸ், மொசாம்பிக், ருவாண்டா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, தான்சானியா, போவதற்கு, துனிசியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லலாம்.