
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டதற்கு பதிலடி கொடுக்க இந்தியா களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தர, போர்க்கான ஆயத்தம் என என தீவிர நடவடிகையை மேற்கொண்டுள்ளது. இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்
நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியது, முசாஃபராபாத், கோட்லி மற்றும் பஹவால்பூரின் அகமது கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்ந சூழ்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய் ஹிந்த்! என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு துணை நிற்கிறது நாட்டிற்கு பக்க பலமாக தமிழ்நாடு நிற்கிறது என முதல்வர் மு க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.