சீனாவின் இலக்காகும் லடாக்... போரிட தயாராகும் உள்நாட்டு ஹெலிகாப்டர்கள்!!

By Narendran SFirst Published Oct 5, 2022, 6:45 PM IST
Highlights

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் சீனாவின் இலக்காக இருக்கும் லடாக் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் தனது சேவையை தொடங்க  உள்ளது.  

பாதுகாப்புத்துறையில் அதீத கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, அதற்கான நிதியை ஒதுக்கி ஆயுதங்களை தயாரிப்பதிலும், வாங்குவதிலும், போர் ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை மேம்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் முற்றிலும் உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர் தயாரிக்க ரூ.3,510 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் 4 இலகு ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டன. மொத்தமாக தயாரிக்க திட்டமிடப்பட்ட 15இலகு ரக ஹெலிகாப்டர்களில் 10 விமானப்படைக்கும், 5ராணுவத்திற்கும் அர்ப்பணிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே 4ஹெலிகாப்டர்கள் ராணுவத்திற்கு அர்பணிக்கப்பட்ட நிலையில் மற்றொரு ஹெலிகாப்டர் நவம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: மசூதியில் தொழுகைக்கான அழைப்பு வந்ததும் பேச்சை நிறுத்திய அமித் ஷா

இந்த நிலையில் ராணுவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் சீனா ராணுவத்தின் கவனம் மிகுந்த அசாமின் மிஸ்ஸாரி கிராமத்தில் உள்ள விமான ராணுவ விமானத் தளத்தில் தனது சேவையை தொடங்க உள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 150 கி.மீ தொலைவில் இருக்கும் ராணுவ தளத்தில் இலகு ரக ஹெலிகாப்டர்கள் சேவையை தொடங்க உள்ளதால் இந்திய ராணுவத்திற்கு மேலும் பலம் சேர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி சீனாவின் நோக்கமாக இருக்கும்போது அங்கு அறிதிறன் வாய்ந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது பலமாகவே அமையும்.

இதையும் படிங்க: "எனக்கு பத்து தல இருக்கு.. ஆனா உனக்கு ஒரே ஒரு தலை தான்".. மாஸ் எண்டரி கொடுக்கும் ராவணன்..

ஏனெனில் காலநிலை சூழலுக்கும், எதிரிகளுடன் போரிடும் வகையிலும் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏவுகணைகள், பிற ஆயுதங்களைச் சுடும் திறன்கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், எதிரிகளின் வான்வழித் தாக்குதலைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, 5,000 மீட்டர் உயரத்தில் இருந்து தரையிரங்கும் திறன் கொண்டது. மழைக்காலங்களிலும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியும்.

click me!