
Lawyer Attempts to Throw Shoe at Chief Justice : டெல்லி: தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அறைக்குள் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. காலையில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது ஷூ வீச முயற்சி நடந்துள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிராக தலைமை நீதிபதி செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, ஒரு வழக்கறிஞர் கோஷமிட்டபடி ஷூ வீச முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக உச்ச நீதிமன்றப் பாதுகாப்புப் படையினர் தலையிட்டு அந்த வழக்கறிஞரைப் பிடித்துச் சென்றனர்.
71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர்தான் இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தனது எதிர்ப்பு தலைமை நீதிபதிக்கு எதிராக மட்டுமே என்றும், அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி வினோத் சந்திரனிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவங்களால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது, ஆனால் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன. முன்னதாக ஒரு வழக்கைக் விசாரிக்கும்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்த கருத்துகளே, ஷூ வீச முயன்ற வழக்கறிஞரைத் தூண்டியதாகத் தெரிகிறது.
பஜாராவோவில் உள்ள ஏழடி உயர விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவக் கோரி ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது,தலைமை நீதிபதி ஒரு கருத்தை குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராகத்தான் அந்த வழக்கறிஞர் தலைமை நீதிபதியை தாக்க முற்பட்டுள்ளார். அப்போது தலைம நீதிபதி மற்ற வழக்கறிஞர்களிடம் கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு தலைமை நீதிபதி கவாய் கேட்டுக் கொண்டார்