
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி ரிட்டன் தாதமாக தாக்கல் செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் ஜெட்லி டெல்யில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ ஜி,எஸ்.டி. வரி செலுத்துபவர்களின் வசதியை கணக்கில் கொண்டு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஜி.எஸ்.டி.ஆர்.-3பி ரிட்டனை தாமதாக தாக்கல் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை 2 மாதங்களுக்கு விதிக்கப்படாது. அவ்வாறு அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தால், அது திருப்பி வரிசெலுத்துபவர்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
செப்டம்பர் மாத வசூல்
செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி 92,150 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
மத்திய ஜி.எஸ்.டி. கணக்கில் ரூ.14 ஆயிரத்து 042 கோடியும், மாநில ஜி.எஸ்.டி கணக்கில் 21 ஆயிரத்து 172 கோடி ரூபாய் ஆகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பிரிவில் ரூ .48 ஆயிரத்து 948 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. 42.91 லட்சம் வரி செலுத்துபவர்களிடம் இருந்து, ரூ.92 ஆயிரத்து 150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ .95,000 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ .91,000 கோடியாக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.