Lata Mangeshkar:லதா மங்கேஷ்கர் மறைவு.. முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..பிரதமர் மோடி பங்கேற்பு..

By Thanalakshmi VFirst Published Feb 6, 2022, 3:00 PM IST
Highlights

மறந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடைபெறும் எனவும் இரண்டு நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

மறந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடைபெறும் எனவும் இரண்டு நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பிரதமர் தனது டிவிட்டரில் "அருமையான மற்றும் அக்கறையுள்ள லதா தீதி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் நம் தேசத்தில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார். வரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாச்சாரத்தின் தலைசிறந்த வீரராக நினைவு கூர்வார்கள், அவரது தேன் போன்ற இனிமையான குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டுள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார் .

மேலும் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தியதாக பிரதமர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். "பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை அவர் நெருக்கமாகக் கண்டார். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் எப்போதும் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பினார்," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மும்பையில் நடக்கும் லதா மங்கேஷ்கரின் அரசு சார்பில் நடைபெறும் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். லதா திதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த இன்னும் சிறிது நேரத்தில் மும்பை புறப்படுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.

Will be leaving for Mumbai in some time to pay my last respects to Lata Didi.

— Narendra Modi (@narendramodi)
click me!