
நாடு முழுவதும் கடந்தாண்டு ரூ.16,365.20 கோடி சுங்கக் கட்டணம் வசூல் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ரூ.1756.57 கோடியும், ராஜஸ்தானில் ரூ.2,391.39 கோடியும் சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகள் பல தனியார் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இவர்களது கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது.
இந்நிலையில், 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அப்போது, தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் முறை நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார்.
இதைதொடர்ந்து சுங்கச்சாவடியில் பணம் கட்டும்போது குறைந்த கிலோ மீட்டரில் சாலையை உபயோகிப்பவர்களும் அதிக கிலோ மீட்டர் சாலையை உபயோகிப்பவர்களும் ஒரே அளவு பணத்தை கட்ட வேண்டியுள்ளது என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதை போக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை தீட்டி வந்தது. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவதுஒரு வாகனம் குறிப்பிட்ட சாலையில் எத்தனை கி.மீ., பயணம் செய்கிறதோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தினால் போதும்; முழு கட்டணம் செலுத்த தேவையில்லலை.
இந்நிலையில், நாடுமுழுவதும் கடந்தாண்டு மட்டும் சுங்கச்சாவடியில் வசூலை மத்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது, நாடு முழுவதும் கடந்தாண்டு ரூ.16,365.20 கோடி சுங்கக் கட்டணம் வசூல் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ரூ.1756.57 கோடியும், ராஜஸ்தானில் ரூ.2,391.39 கோடியும் சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.