ரெயிலின் கழிவறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு லஷ்கர் இ தொய்பா பழிதீர்க்க சதி

First Published Aug 10, 2017, 8:08 PM IST
Highlights
Lashkar-e-Taiba revenge plot


லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு துஜானா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், அமிர்தசரஸில் இருந்து கொல்கத்தாசெல்லும் அகல் தாக்த் எக்ஸ்பிரஸ் ரெயின் கழிவறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டும், ஒரு கடிதத்தையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

சுதந்திரதினத்தையொட்டி பாதுகாப்பு படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது,  வெடிகுண்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இது குறித்து ரெயில்வே கூடுதல் இயக்குநர் பி.கே. மவுரியா கூறியதாவது-

 கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அப்போது ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு தொலைபேசியில், ரெயிலின்கழிப்பறையில் மர்மபொருள் இருப்பதாக பயணி ஒருவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அக்பர்காஞ்ச் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்த ரெயில் பயணிகளும் இறக்கிவிடப்பட்டு தீவிரமாக சோதனையிடப்பட்டது.

ஏ.சி. பிரிவில் உள்ள பி.சி. பெட்டியில் இருந்து புகார் வந்திருந்தது தெரியவந்தது, இதனால், வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு, பெட்டியை முழுமையாக சோதித்தனர். அப்போது கழிப்பறையில் இருந்த வெடிகுண்டை வெடிகுண்டு நிபுனர்கள் கண்டுபிடித்தனர்.  அந்த வெடிகுண்டு ‘லைட்டர்’ மூலம் வெடிக்கும் வகையில் வெடிகுண்டு தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இந்த வெடிகுண்டு தானாக வெடிக்க வாய்ப்பு இல்லை.

மேலும், அந்த வெடிகுண்டு அருகே ஒரு கடிதமும் இருந்தது. அதில், சமீபத்தில் கொல்லப்பட்ட லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதி துஜானா கொலைக்கு, இந்தியா பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் அந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு, செயல் இழக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்துரெயில்வே நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு, தீவிர விழிப்புணர்வில் வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!