லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பாரதி ஆகியோர் ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளனர்.
ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றது தொடர்பான வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே வேலைவாய்ப்பு வழங்குவதில் நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பாரதி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது ஒவ்வொருவரும் தலா ரூ.50 ஆயிரம் பிணைப்பத்திரம் செலுத்தியதை அடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இவர்களுடன் வழக்கில் தொடர்புடைய மேலும் 13 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.
நடு வானில் விமானத்தில் அலறிய அபாய ஒலி! 8வது சிறுமியின் செலயலால் பீதியடைந்த பயணிகள்!
74 வயதான லாலு பிரசாத் , சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சக்கர நாற்காலியில் வந்தார். காலை 10 மணியளவில் ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தை அடைந்தார். காலை 11 மணியளவில் சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் குடும்பத்தினருடன் ஆஜரானார்.
கடந்த வெள்ளிக்கிழமை பீகார் மாநிலத்தின் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் பலரது இடங்கள் சோதனை வளையத்துக்குள் வந்தன. தெற்கு டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு, அவரது மகன் தேஜஸ்வி யாதவ், மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் வீடுகள் உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் 1,900 அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. ரூ.600 கோடி மதிப்பிலான குற்றச் செயல்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் செய்திருக்கும் முதலீடுகள் பற்றி விவரங்கள் கிடைத்துள்ளன.
சூரிய நமஸ்காரத்தின் போது உயிரிழந்த ஆசிரியை.. அடுத்தடுத்து 2 பகீர் சம்பவம்