‘ஆர்.எஸ்.எஸ். பேண்ட் அணிந்ததற்கு காரணம் தெரியுமா?’ லாலு கூறுகிறார் புதுவித பதில்

 
Published : Oct 13, 2016, 09:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
‘ஆர்.எஸ்.எஸ். பேண்ட் அணிந்ததற்கு காரணம் தெரியுமா?’ லாலு கூறுகிறார் புதுவித பதில்

சுருக்கம்

(மேட்டர் டி.சி. பாக்ஸ்)

பாட்னா, அக்.13-

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அரைக்கால் சட்டை சீருடையை கைவிட்டதற்கு தனது மனைவி ராப்ரிதேவி அளித்த நிர்பந்தமே காரணம் என்று, லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்களின் 90 ஆண்டு கால சீருடை நேற்று முன்தினம் விஜயதசமி நாளில் மாற்றப்பட்டது.

ராப்ரிதேவியே காரணம்

இதுவரை அரைக்கால் சட்டை அணிந்த அவர்கள், தற்போது முழுக்கால் சட்டை சீருடைக்கு மாறி உள்ளனர்.

இந்த நிலையில், இந்த சீருடை மாற்றத்திற்கு, தனது மனைவியும், பீகார் மாநில முன்னாள் முதல்-அமைச்சருமான ராப்ரி தேவிதான் முக்கிய காரணமாக திகழ்ந்தவர் என்று, ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறி இருக்கிறார்.

வெட்கமாக இல்லையா?

இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் ‘‘ஏன் இந்த ஆர்.எஸ்.எஸ். முதியவர்கள் அரைக்கால் சட்டையில் பொது இடங்களில் சுற்றுகிறார்கள்; அவர்களுக்கு வெட்கமாக இல்லையா?’’ என்று கடந்த ஜனவரி மாதத்தில் தனது மனைவி ேகள்வி எழுப்பியதாகவும், இதனால்தான் தங்கள் சீருடைய மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டதாகவும், குறிப்பிட்டு இருக்கிறார்.

மன நிலையிலும் மாற்றம்

லாலு பிரசாத் யாதவின் மற்றொரு பதிவில், ‘‘சீருடையை மாற்றியதுபோல் தங்களுடைய மன நிலையையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆயுதங்களையும், நச்சுக்களை பரப்புவதையும் அவர்கள் கைவிட வேண்டும் என்றும் நிர்பந்தம் கொடுப்போம்’’ என்றும் கூறி இருக்கிறார்.

சீருடை குறித்து ஏற்கனவே ராப்ரி தேவி கருத்து தெரிவித்து இருந்தபோது, பீகார் மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான சுஷில்குமார் மோடி அவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். ‘‘19-ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தவர் போல் ராப்ரி தேவி பேசுவதாக’’ அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீருடையை மாற்றுவது என்று கடந்த மார்ச் மாதத்தில் முடிவு செய்த ஆர்.எஸ்.எஸ். தற்போது அந்த முடிவை செயல்படுத்தி உள்ளது

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
காலையிலேயே வந்த ஷாக் நியூஸ்.. ஆம்னி பேருந்து தீப்பிடித்து 10 பேர் உடல் கருகி பலி!