வெள்ள நிலவரத்த பாருங்கன்னா.. உட்கார்ந்து ஜாலியா பேப்பர் படிக்கும் குமாரசாமி

By karthikeyan VFirst Published Aug 20, 2018, 10:31 AM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அம்மாநில முதல்வர் குமாரசாமி, ஆய்வு செய்யாமல் ஹெலிகாப்டரில் செய்தித்தாள் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 
 

கர்நாடக மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அம்மாநில முதல்வர் குமாரசாமி, ஆய்வு செய்யாமல் ஹெலிகாப்டரில் செய்தித்தாள் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கேரளா முழுவதும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 

கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்ததால் அம்மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. 

குடகு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேடான பகுதியில் இருந்தவர்களை ராணுவத்தினர், கயிறு கட்டியும், செயற்கை பாலம் அமைத்தும் பத்திரமாக மீட்டனர். 

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஹெலிகாப்டரில் முதல்வர் குமாரசாமி ஆய்வு நடத்தினார். ஆய்வு செய்வதற்காக ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் குமாரசாமி, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யாமல், ஹெலிகாப்டரில் உட்கார்ந்து கூலாக செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதை ஆய்வு செய்வதை விடுத்து ஆய்வு என்ற பெயரில் முதல்வர் அசால்ட்டாக பேப்பர் படித்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 
 

click me!