முழுதாய் நிரம்பிய கேஆர்எஸ் அணை… தமிழ்நாட்டுக்கு வெள்ள ஆபத்து…

Published : Oct 27, 2021, 08:57 AM IST
முழுதாய் நிரம்பிய கேஆர்எஸ் அணை… தமிழ்நாட்டுக்கு வெள்ள ஆபத்து…

சுருக்கம்

கேஆர்எஸ் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தமிழகத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கேஆர்எஸ் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தமிழகத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. காவிரியாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணையானது மழையினால் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. அணையில் தற்போது 121 அடியை எட்டி உள்ளதால் 20 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட அதிகாரிகள் உத்தேசித்து உள்ளனர். 

ஆகையால் கேஆர்எஸ் அணையின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், காவிரி கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வெள்ள அபாய அறிவிப்பை கேஆர்எஸ் அணையின் நிர்வாக பொறியாளர் வெளியிட்டு இருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எல்லா சட்டத்துக்கும் இந்தி பெயர்.. இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் பாஜக.. ப.சிதம்பரம் காட்டம்!
டெல்லி காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம்! பகீர் கிளப்பும் நாசா கண்டுபிடிப்பு!